சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே நடந்த மோதலில் மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர், அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில் கைதான பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் பெற்றோர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இக்கொலை சம்பவத்தில் கைதான 7 மாணவர்களில் இருவர் ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
குற்றச்செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு மருத்துவமனைகளில் சேவை உள்ளிட்ட நிபந்தனைகளுடன் கருணை காட்டி நீதிமன்றம் ஜாமின் வழங்குகிறது. ஆனால், அவர்கள் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடுவதாக நீதிபதி ஜெகதீஷ் சந்திரா வேதனை.
எப்படியாவது நீதிமன்றம் ஜாமின் வழங்கிவிடும் என்ற தவறான எண்ணத்தை மாணவர்கள் மத்தியில் நீதிமன்றம் உருவாக்கக் கூடாது. இவ்வழக்கில் ஜாமின் கோரியுள்ள மாணவர்களின் பெற்றோரிடம் நான் பேச வேண்டும் என நீதிபதி ஜெகதீஷ் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வரும் நவம்பர் 14ம் தேதி ஜாமின் கோரியுள்ள மாணவர்களின் பெற்றோர் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஜெகதீஷ் ஒத்திவைத்துள்ளார்.