மருத்துவக் கல்லூரிகளிலேயே பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றால், பெற்றோர்கள் எப்படி படிக்க அனுப்புவார்கள் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாட்டையே உலுக்கிய பயிற்சி மருத்துவர் படுகொலை சம்பவம் குறித்து வேதனை தெரிவித்துள்ள ராகுல் காந்தி கூறியதாவது :
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; இதனால் மருத்துவர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது
பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் மருத்துவமனை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் மீது கடுமை கேள்விகள் எழுப்புகின்றன.
மருத்துவக் கல்லூரி போன்ற இடங்களில் மருத்துவர்களுக்குப் பாதுகாப்பில்லை என்றால், பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை எப்படி வெளியில் படிக்க வைப்பார்கள்?; நிர்பயா வழக்குக்குப் பிறகு இயற்றப்பட்ட கடுமையான சட்டங்கள் கூட இதுபோன்ற குற்றங்களைத் தடுப்பதில் ஏன் தோல்வியடைந்தன?
Also Read : தட்டிக்கேட்ட கேட்ட மாணவனுக்கு கத்தியால் குத்திய திமுக பிரமுகர் – கொதித்தெழுந்த அண்ணாமலை
ஹத்ராஸ் முதல் உன்னாவ் வரையிலும், கதுவா முதல் கொல்கத்தா வரையிலும் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து அதிகரித்து வரும் சம்பவங்கள் குறித்து அனைத்து கட்சிகளும், சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரும் தீவிர விவாதங்களை நடத்தி உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தாங்க முடியாத வலியால் பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் நான் நிற்கிறேன். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை சமூகத்தில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் வகையில் தண்டனை வழங்கப்பட வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் நாட்டின் வளர்ச்சியை பாதிப்பது மட்டுமல்லாமல் ஏன்டா இந்த நாட்டில் பிறந்தோம் என ஒவ்வரு இந்திய பெண்ணையும் நினைக்க வைத்து வருவது வேந்தனைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.