சர்வேதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று ஐபில் தொடரில் மட்டும் விளையாடி வரும் எம்.எஸ்.தோனி PR குறித்து பேசியிருப்பது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.
உலக கிரிக்கெட்டில் வரலாறு படத்தை இந்திய வீரர்களின் பட்டியலில் டாப் ஆர்டரில் இருப்பவர் மகேந்திர சிங் தோனி . தன்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த தோனி கடந்த சில வருடங்களுக்கு முன் சர்வேதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
Also Read : அழிவின் விளிம்பில் ‘பாறு கழுகுகள்’ – அதிரடி நடவடிக்கை எடுத்த மத்திய அரசு..!!
இதையடுத்து தற்போது ஐபில் தொடரில் மட்டும் விளையாடி வரும் இவரை காண்பதற்காகவே உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான ரசிகர்கள் வருகை தருவார்கள் இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ் தோனி PR குறித்து பேசியது தற்போது இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.
2004ம் ஆண்டு நான் கிரிக்கெட் விளையாட தொடங்கிய போது டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் வளர தொடங்கியிருந்தது. அந்த நேரத்தில் பலரும் என்னிடம் உங்களுக்கு ஒரு நல்ல PR வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் அவர்களிடம், நான் நல்ல கிரிக்கெட் விளையாடினால், எனக்கு PR யாரும் தேவையில்லை என்று சொன்னேன் என தெரிவித்துள்ளார்.