தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த பட்டியலினத்தவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் எங்களை ஆதரித்தால் நிச்சயம் ஒரு தலித்தை முதலமைச்சராக்குவோம் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
திண்டிவனம் அருகே இன்று செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் கூறியதாவது :
தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவரை 1998 ஆம் ஆண்டிலே மத்திய அமைச்சர் ஆக்கியது பா.ம.க தான். ஆகவே தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த பட்டியலினத்தவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் எங்களை ஆதரித்தால் நிச்சயம் ஒரு தலித்தை முதலமைச்சராக்குவோம்.
Also Read : ஒரே நேரத்தில் மூன்று சாதனை புத்தகங்களில் இடம் பிடித்த தமிழக கால்பந்து வீரர்..!!
சுதந்திர தினமான இன்றைய நாளில் முதல்வருக்கு நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். அது என்னவெனில் தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டை காக்க சாதிவாரி கணக்கெடுப்பை எடுங்கள். பட்டியல் இன சமுதாயத்திற்கு 18 சதவீதம் இட ஒதுக்கீடு 14 சதவீதம்தான் கிடைக்கும்.
பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு கிடைத்து வரும் 30 சதவீத இட ஒதுக்கீடு 24 சதவீதம் மட்டும்தான் கிடைக்கும். 20 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்து வரும் எம்பிசி சமூகத்திற்கு 14 சதவீதம்தான் கிடைக்கும்.
நான் மத்திய அமைச்சராக இருந்த நேரத்தில் 22 ஆண்டுகளாக பட்டியலினத்தவருக்கு இட ஒதுக்கீடு கிடையாது. ஆனால் ஆல் இந்தியா மெடிக்கல் கோட்டாவில் நான் தான் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தேன் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.