ITamilTv

இந்த உலகம் உனக்கானதில்லை : கண்ணீருடன் விஜய் ஆண்டனியின் மனைவி பகிர்ந்த எமோஷனல் பதிவு..!!

Spread the love

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் கடந்த சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரை மறக்க முடியாமல் கண்ணீருடன் விஜய் ஆண்டனியின் மனைவி பகிர்ந்துள எமோஷனல் பதிவு தற்போது அனைவரையும் உருக வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக வெற்றி நடைபோட்டு கொண்டிருந்த விஜய் ஆண்டனி சில ஆண்டுகளாக ஹீரோவாகவும் கலக்கி வருகிறார் . இந்நிலையில் இவர் அன்புமகள் மீரா மன அழுத்தம் காரணமாக வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது .

12 ஆம் வகுப்பு படித்து வந்த மீரா , சில நாட்களாகவே மன அழுத்தத்தில் இருந்து வந்த நிலையில் கடத்த செப்டம்பர் 19 ஆம் தேதி அதிகாலை தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார் . மீராவின் இந்த முடிவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது .

இந்நிலையில், நடிகர் விஜய் ஆண்டனியின் மனைவி தனது மகளின் இறப்பு குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த பதிவில் அவர் கூறியதாவது :

“மீரா தங்கமே உனது பியானோ உன்னுடைய தொடுதலுக்காக ஏங்கி காத்திருக்கிறது. நாங்கள் அனைவரும் நம்பிக்கை இழந்து இருக்கிறோம். நீ சீக்கிரம் சென்றுவிட்டாய். இந்த உலகம் உனக்கானது இல்லை.

நீ மட்டும் சென்றுவிட்டாய் உனது அம்மாவாகிய நான் இன்னும் இங்கே இருக்கிறேன். வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இடையிலான கான்செப்ட்டை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் உன்னை சந்திக்கும்வரை சாப்பிட்டுவிட்டு நன்றாக இரு. லாராவும் உன்னை ரொம்பவே மிஸ் செய்கிறார்” என கண்ணீருடன் பதிவிட்டிருக்கிறார் .


Spread the love
Exit mobile version