ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறைக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய முயன்ற இசையமைப்பாளர் இளையராஜாவை கோவில் நிர்வாகிகள் தடுத்த நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறைக்குள் இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம் செய்யமுயன்றபோது அவரிடம் வரவேற்பில் விதிமீறல்கள் இருப்பதாக கூறி வெளியே செல்லும்படி ஜீயர்கள், பட்டர்கள் கூறியுள்ளனர்.
Also Read : அரசு முறை பயணமாக இந்தியா வந்த இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகவுக்கு உற்சாக வரவேற்பு.!!
இதையடுத்து கருவறைக்கு வெளியில் இன்று சாமி தரிசனம் செய்த இளையாராஜா அங்கிருந்து கடுகடு முகத்துடன் வெளியேறினார் . இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து தற்போது கோவில் நிர்வாகம் இச்சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ளது.
ஜீயர்கள் தவிர வேறு யாருக்கும் அர்த்த மண்டபத்துக்குள் அனுமதி கிடையாது அர்த்த மண்டபத்தில் உற்சவர் சிலைகள் நிரந்தரமாக இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டது.
கருவறைக்கு முன்பிருக்கும் அர்த்த மண்டபத்தில் நுழைந்த இளையராஜா வெளியேற்றப்பட்ட விவகாரத்தில் தாங்கள் விதிமுறையை கடைபிடித்துள்ளோமே தவிர வேறு எதுவும் கிடையாது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.