அரபிக்கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் தீவிர புயலாக வலுப்பெற்று, வடக்கு-வடகிழக்கில் நகர்ந்து செல்லும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது .
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கோடை வெயில் இம்முறை வழக்கத்திற்கு மாறாக செம காட்டு காட்டியதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதிக்குள்ளாகினர் .இந்நிலையில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் கடந்து சில நாட்களாக ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது .
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில நாட்களாக மிதமான மழை பெய்து வந்ததால் வெயிலின் தாக்கம் குறைந்து சற்று குளிர்ந்த வானிலை ஏற்பட்டது . இந்நிலையில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மேலும் சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
மத்தியகிழக்கு அரபிக்கடலில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் உருவான பிபோர்ஜோய் புயல் அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் தீவிர புயலாக வலுப்பெற்று, வடக்கு-வடகிழக்கில் நகர்ந்து செல்லும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது .
இதனால் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .