வேலூர் ஆவினில் ஒரே பதிவெண்ணில் இரண்டு வாகனங்கள் இரு வழித்தடங்களில் இயங்கிய சம்பவம் குறித்து 12ம் தேதிக்குள் விளக்கமளிக்க சாய்ராம் செக்யூரிட்டி ஏஜென்சிக்கு ஆவின் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
ஆவின் பால் பொருட்கள் தயாரிப்பு பண்ணையில் ஒப்பந்தப் பணியாளர்களாக 50க்கும் மேற்பட்ட சிறார்களை பணியில் ஈடுபடுத்தியதாக தகவல் தமிழ்நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது . இச்சம்பவம் குறித்து தீவிர விசாரனை அந்த தகவல் உண்மையில்லை என்று புதிய பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் மனோதங்கராஜ் விளக்கம் கொடுத்துள்ளார் .
இந்நிலையில் தற்போது ஆவின் பால் பண்ணைகளில் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் வேலூர் சத்துவாச்சாரியில் ஒரே பதிவு எண்ணில் 2 வாகனங்கள் முறைகேடாக இயக்கப்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர் .

இதுகுறித்து துறை சார்ந்த அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் முறைகேடு நடந்திருப்பது உறுதியானது. இதையடுத்து வேலூர் ஆவினில் ஒரே பதிவெண்ணில் இரண்டு வாகனங்கள் இரு வழித்தடங்களில் இயங்கிய குற்றத்திற்காக இரண்டு வாகனங்களின் ஒப்பந்தத்தையும் ரத்து செய்து இந்த விவகாரம் தொடர்பாக 12ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டுமென சாய்ராம் செக்யூரிட்டி ஏஜென்சிக்கு ஆவின் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது .