நாகர்கோவிலில் ஆசை வாழ்த்தி பேசி பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த காமுகன் காசிக்கு கொடுக்கப்பட்டுள்ள தண்டனையை மேலும் அதிகரித்து அம்மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி என்ற சுஜி. இவர் சமூக வலைதளம் வழியாக நண்பர்களாக பழகிய பெண்களிடம் நெருக்கமாக பழகி ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து சேகரித்து வைத்துள்ளார்.
ஒருகட்டத்தில் நெருக்கமாக பழகிய பெண்கள் அவரை விட்டு செல்ல நினைக்கும் போது ஏற்கனவே எடுத்த ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காட்டி அவர்களுடன் கட்டாய உறவு கொள்வது அவர்களிடம் இருந்து பணம் மற்றும் நகை பறிப்பது போன்ற பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ககளில் சிலர் காசியின் தொடர் தொல்லை தாங்க முடியாமல் போலீஸில் புகார் கொடுத்தனர் . இதையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு காசியை கைது செய்த போலீசார் அவனிடம் இருந்த மடிக்கணினி மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர் . அதில் ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் காசியால் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக வந்து புகார் கொடுக்கலாம் அவர்களின் விவரம் பாதுகாக்கப்படும் என தெரிவித்திருந்தனர் .
இதையடுத்து காசியின் மேல் உள்ள வழக்கு இன்னும் உறுதியாக காசிக்கு ஆயுள் தண்டனை விதித்து அம்மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் கந்து வட்டி புகாரில் நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள், அவரது தந்தை தங்கபாண்டியனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த் வழக்கில் இடைத்தரகர் நாராயணனுக்கு 3 ஆண்டுகள் சிறை கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.