தமிழகத்தில் அரசியல் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பரமக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது :
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தமிழக முழுவதும் அனைத்து குற்றங்களும் அதிகரித்துள்ளன. சமீபகாலமாக பல்வேறு கட்சித் தலைவர்கள் மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர்.
குறிப்பாக நெல்லையில் கொல்லப்பட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் பற்றி போலீஸார் விசாரிப்பதாகக் கூறுகின்றனர். ஆனாலும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை.
4 நாள் முன்பு சேலம் மாநகரத்தில் எங்கள் கட்சியின் மண்டல குழு முன்னாள் தலைவர் சண்முகம் படுகொலை செய்யப்பட்டார். 2 நாளுக்கு முன்பு, சென்னையில் மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படு கொலை செய்யப்பட்டுள்ளார்.
Also Read : ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை பெற நடவடிக்கை எடுத்திடுக – அரசுக்கு கோரிக்கை வைத்த அன்புமணி
தமிழக முதல்வரின் தொகுதியிலேயே தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது சட்டம், ஒழுங்கு தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சூழலாக தான் பார்க்கப்படுகிறது. மக்களுக்கு மட்டுமின்றி அரசியல் தலைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. காவல்துறையினரை கண்டு யாருக்கும் பயமில்லை.
அண்ணாமலை ஒரு பச்சோந்தி. அவர் விமர்சிப்பதுபோல் நான் துரோகி அல்ல. துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலை தான். கீழத்தரமாக, அவதூறாக எங்களது தலைவர்களை விமர்சித்தால் நாங்கள் எப்படி பொறுத்துக் கொள்வோம். எங்களை ஆளாக்கிய தலைவர்களை பற்றிப் பேசினால் எங்களுக்கு குமுறல் வரும். இவர் கட்சித் தலைவர் பதவிக்கு பொருத்தமில்லாதவர். நாங்கள் அவரைப் போல் அப்பாயின்மென்ட்ல வரவில்லை. கண்ணாடியில் முகத்தை பார்த்து அவர் தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.