சென்னையில் டிரோன்கள் பறக்க தடை உத்தரவு இரண்டு நாட்களுக்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15 சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி சென்னை தலைமை செயலக பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
அந்த வகையில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144ன் கீழ் ஆழ்வார் பேட்டையில் உள்ள முதல்-அமைச்சர் வீடு இருக்கும் பகுதியில் இருந்து தலைமை செயலகம் வரையிலும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளன.
இது தொடர்பான அறிவிப்பை சென்னை போலீஸ் கமிஷனர் அருண் வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மேற்கண்ட பகுதிகளில் டிரோன்கள், சிறிய ரக விமானங்கள், பெரிய பலூன்கள் ஆகியவை பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்களும் இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட ஆழ்வார் பேட்டையில் உள்ள முதல்-அமைச்சர் வீடு இருக்கும் பகுதியில் இருந்து தலைமை செயலகம் வரையிலான பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.