டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக தோல்வியைத் தழுவிய ஆஸ்திரேலிய அணி, தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
நேற்று நடைபெற்ற அனல் பறக்கும் போட்டியில் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய மோதியது . இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது.
Also Read : உள்ளாட்சித் தேர்தல் பணியின் போது உயிரிழப்பு – நிவாரணத் தொகையை உயர்த்தியது தமிழக அரசு..!!
இதையடுத்து இன்று வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
இதன்காரணமாக டி20 உலக கோப்பை தொடரில் இருந்து ஆஸ்திரேலியா வெளியேறியுள்ளது .
இந்நிலையில் 2023ல் நடந்த ODI உலக கோப்பையில் ஆப்கானிஸ்தானின் அரையிறுதி கனவை நொறுக்கியதற்கும், இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி கோப்பை வென்றதற்கும், இரு அணிகளும் ஆஸ்திரேலியாவை பழி தீர்த்துள்ளதாக ரசிகர்கள் தற்போது கருத்து தெரிவித்து வருகின்றனர்.