இந்தியாவில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் நேற்று நடைபெற்ற ஜப்பான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய மகளிர் வெற்றி பெற்றுள்ளது.
மகளிருக்கான 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இதில் நடப்பு சாம்பியனான ஜப்பான், 3 முறை சாம்பியனான தென்கொரியா, முன்னாள் சாம்பியனான இந்தியா மற்றும் சீனா, மலேசியா, தாய்லாந்து ஆகிய 6 சிறப்பான தரமான அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா – ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது . ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடிய இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி மீண்டும் ஒரு முறை தனது பலத்தை நிரூபித்துள்ளது .
இந்த தொடரில் ஏற்கவே அரையிறுதி போட்டிக்கு கெத்தாக முன்னேறியுள்ள இந்திய அணி , ஜப்பான் அணியை வீழ்த்தி 4வது வெற்றியை சுவைத்ததன் மூலம் இந்திய அணி, தற்போது 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.