வெஸ்ட் இண்டீஸ் மண்ணிற்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகிறது.
இதில் முதலில் ஒரு நாள் போட்டிகள் (ஜூலை 22, 24 மற்றும் 27-ம் தேதி) டிரினிடாட்டின் போர்ட் ஆப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்திய நேரப்படி, இப்போட்டி இரவு 7 மணிக்கு தொடங்கியது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் இந்திய அணியை மூத்த வீரர் ஷிகர் தவான் வழிநடத்துகிறார். அவருக்கு உறுதுணையாக ஜடேஜா செயல்பட இருக்கிறார். இந்தத் தொடரில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா ஆகிய நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்று ஏற்கனவே பிசிசிஐ அறிவித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் மண்ணிற்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடுகிறது. இதில் முதலில் ஒரு நாள் போட்டிகள் (ஜூலை 22, 24 மற்றும் 27-ம் தேதி) டிரினிடாட்டின் போர்ட் ஆப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் எதிரான ஒருநாள் தொடரை வென்றதன் மூலம், ஒரு அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 12 தொடர்களை வென்று இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக ஜிம்பாப்வேவுக்கு எதிராக பாகிஸ்தான், 11 போட்டிகளை வென்றதே சாதனையாக இருந்தது.