ITamilTv

2 பெண்கள் நரபலி செய்த கொடூரம்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Spread the love

கேரளா(kerala)மாநிலம் பத்தனம் திட்டா (pathanamth)மாவட்டத்தில் உள்ள திருவல்லாமல், காணாமல் போனதாகக் கூறப்பட்ட இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம்(kerala) திருவல்லாமல் பகுதியில் மருத்துவர் தம்பதியினர், வீட்டில் செல்வம் பெருகவும் வளம் செழிக்கவும் நரபலி கொடுக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக முகவர் மூலமாகப் பெண்களை அழைத்துவர முடிவு செய்துள்ளனர்.

அதன்படி பெரும்பாவூரை சேர்ந்த முகவர் கடைவேந்திரா என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை நரபலிக்காக அழைத்து வந்துள்ளார்.அதே வேளை கடந்த 27ஆம் தேதி குறித்த இளம்பெண்ணைக் காணவில்லை எனப் பெண்ணின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இரு தினங்கள் கழித்து அந்தப் பெண்ணின் உடல் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் சடலமாக காவல்துறை மீட்டுள்ளனர்.

இது குறித்து பெண்ணின் செல்போன் சிக்னலை வைத்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்ட போது செல்போன் சிக்னல் முகவரின் இடத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து முகவரை கைது செய்த காவல்துறை விசாரணை மேற்கொண்டதில் நரபலி கொடுக்கப்பட்டதை அந்த முகவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

 

இது குறித்து மருத்துவ தம்பதியினர் மற்றும் முகவர் ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றொரு காலடி பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு பெண்ணும் காணவில்லை எனப் புகார் எழுந்தது.

இது குறித்து ஆரன்முலா காவல்துறை விசாரணை மேற்கொண்ட போது அந்தப் பெண்ணையும் நரபலிக்கு அழைத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது இந்த நரபலி பத்தனம் திட்டா ஆரன்முலா காவல் நிலைய எல்லையில் நரபலி கொடுக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

Gruesome murders of two women in suspected human sacrifice ritual shock Kerala

இதனை அடுத்து கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.பத்தனம்திட்டாவில் இரண்டு பெண்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள அனைத்து குற்றவாளிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version