ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி பரிதாபமாக வீழ்ந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ஷுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாட ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி ஹராரே நகரில் நேற்று துவங்கியது. இதையடுத்து இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது . இதையடுத்து இந்திய அணிக்கு கடின இலக்கை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட துவங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே பேரதிர்ச்சி காத்திருந்தது . தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் ஷர்மா டக் அவுட்டாக அவரை தொடர்ந்து வந்த வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் நடையை கட்டினர் .
Also Read : Party ஏற்பாடு செய்ததற்கு பாராட்டவில்லை – கணவரை கொலை செய்ய முயன்ற பாசக்கார மனைவி..!!
ஆட்டத்தின் இறுதியில் 102 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி தனது தோல்வியை ஒப்புக்கொண்டது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் கில் 31 ரன்கள் எடுத்திருந்தார் . இதன்மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அபாரமாக விளையாடிய ஜிம்பாப்வே கேப்டன் சிகந்தர் ராசா, ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
போட்டிக்கு பின் பேசிய இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் கூறியதாவது :
நான் கடைசி வரை அவுட்டாகாமல் அங்கேயே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நான் அவுட் ஆனது மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது நடப்பாண்டின் முதல் தோல்வியை பெற்றிருப்பது வலியை கொடுக்கிறது என ஷுப்மன் கில் பேசியுள்ளார்.