அமெரிக்க தனிநபர் வருமானத்தில் கால்பாதியை இந்தியா எட்ட 75 ஆண்டுகள் ஆகலாம் என உலக வங்கி அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து உலக வாங்கி வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
கடந்த காலங்களில், நடுத்தர வருவாய் கொண்ட நாடுகள் சந்தித்த சவால்களைக் காட்டிலும், எதிர்காலம் சற்று மிகுந்த சவால்களையே கொண்டிருக்கும், மூத்த குடிமக்களின் எண்ணிக்கை, கடன் சுமை, உலகளவில் நடக்கும் மோதல்கள், கணிக்க முடியாத வணிகம் போன்றவை, வளர்ச்சியில் பிரச்னைகளை உருவாக்கி, பொருளாதார வளர்ச்சியில் பெரும் தடைகளை ஏற்படுத்தலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இன்னமும் பல நடுத்தர வருவாய் கொண்ட நாடுகள், பழைய வரவு செலவு கணக்குகளையே இன்னமும் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக, முதலீடுகளை விரிவுபடுத்தும் கொள்கைகளை வகுப்பதிலும் இதே நிலை தொடர்கிறது.
இது கிட்டத்தட்ட முதல் கியரில், காரை மேலும் வேகமாக இயக்க முயல்வதற்கு சமம் என்கிறது உலக வங்கி அறிக்கை.
தற்போதிருக்கும் நிலையைக் கணக்கிட்டால், அமெரிக்காவின் தனிநபர் வருவாயில் கால் பாதியை எட்ட சீனத்துக்கு 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகலாம் என்றும், இந்தோனேசியா இதனை எட்ட 70 ஆண்டுகளும், இந்தியா 75 ஆண்டுகள் வரை ஆகும் என்றும் அற்த அறிக்கை தெரிவிக்கிறது.
உலகளவில், பொருளாதார வளர்ச்சிக்கான போரானது, பெரும்பாலும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வெற்றிபெறலாம் அல்லது இழப்பை சந்திக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நடுத்தர வருவாய் கொண்ட நாடுகள், உயர் வருவாய் கொண்ட நாடுகளின் நிலைக்கு உயர சில கொள்கைகளையும் பரிந்துரை செய்துள்ளன.
ஒவ்வொரு நாடும், தங்களது பொருளாதார வளர்ச்சியின் நிலையைப் பொறுத்து, கடந்த 1990 முதல் அனைத்து நாடுகளும் பல்வேறு கடினமான கொள்கைகளை வகுத்து துரிதமாக செயல்பட்டாலும் கூட வெறும் 34 நடுத்தர வருவாய் பொருளாதார நாடுகள் மட்டுமே உயர் வருவாய் நிலைக்கு மாற முடிந்தது, மேலும் இந்த நாடுகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவை, ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒருங்கிணைந்ததன் மூலம் பயனடைந்த நாடுகளாக அல்லது புதிய எண்ணெய் வளங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நாடுகளாக இருந்தன என்று வரையறுத்துள்ளது.