ITamilTv

WTC2023 : கைக்கொடுத்த நியூசிலாந்தின் வெற்றி.. இறுதி போட்டியில் இந்தியா

Spread the love

இந்திய – ஆஸ்ட்ரேலிய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் நடந்து முடிந்துள்ளது. 4 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்திய அணி 2-1 என வென்றுள்ளது. அத்துடன் இந்த தொடரின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுவது இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது தான். 4 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளில், சிறிது அளவு கூட சிக்களோ, கடினாமோ இல்லாமல் இந்திய அணி போட்டியை வென்றது. அதிலும் இரண்டாவது போட்டி வெறும் மூன்றே நாட்களில் முடிவு பெற்றது. இதனால் மைதானத்தின் மேலும், வீரர்கள் மீதும் கடும் விமர்சனம் எழுந்தது.

ஐசிசி சில மைதானங்களை விளையாட தகுதி இல்லாத மைதானம் என அறிவித்தது. இந்திய மைதானங்கள் பொதுவாகவே சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இயங்கும் இந்த தொடர் தொடக்கம் முதலே இந்திய சுழல் பந்து வீச்சாளர்களான அஷ்வின், ஜடேஜா பெறும் ஆதிக்கம் செலுத்தினர். மறு பக்கம் இந்திய அணி இந்த தொடரை 3-0, அல்லது 3-1 என்ற கணக்கில் வென்றால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.

முதல் இரண்டு போட்டியில் இந்திய வீரர்கள் விளையாடிய விதம், ஆஸ்ட்ரேலியாவின் சுழல் பந்துக்கு எதிரான தடுமாற்றம் ஆகியவற்றால் இந்திய வசம் மீதமிருக்கும் போட்டிகள் செல்லுமென்று எதிர்பார்த்த நிலையில் தான் திருப்பம் வந்தது.
3 வது போட்டியில் சிறப்பாக விளையாடிய ஆஸ்ட்ரேலியா இந்திய அணிக்கு அவர்களின் சூழலின் தாக்கத்தின் திருப்பிக்கொடுத்தது.

பேட்ஸ்மேன்களின் சிறப்பான அணுகுமுறை, துல்லியமான சுழல் பந்து வீச்சால் இந்த போட்டியில் வெற்றி கண்டது. இந்த வெற்றியால் 4 வது போட்டியில் வென்றால் மட்டுமே இறுதி போட்டிக்கு செல்ல முடியும். அப்படி இல்லையென்றால் நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வி அல்லது டிரா செய்ய வேண்டும். அந்த போட்டியில் இலங்கை வென்றால் அவர்கள் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

ஏற்கனவே முதல் இறுதி போட்டியாளராக ஆஸ்ட்ரேலியா அணி தகுதி பெற்றது. இந்த நிலையில் தான் இன்று முதல் போட்டியில் நியூசிலாந்து அணி இறுதி பந்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் இலங்கை இறுதி போட்டிக்கு செல்லும் வாய்பை இழந்தது. ஆஸ்ட்ரேலியாவின் கடைசி நாளான இன்று போட்டி நடந்துக்கொண்டிருக்கும்போதே இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. வரும் ஜூன் மாதம் 7 ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது.


Spread the love
Exit mobile version