ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் (SCO) தலைமை ஏற்க சீனாவுக்கு இந்தியா ஆதரவு தருவதாக அறிவித்துள்ளது.
கஸகஸ்தான் நாட்டில் நடைபெற்ற கூட்டமைப்பு மாநாட்டின் ஒரு பகுதியாக, இந்திய – சீன வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
சீனா, ரஷிய அதிபர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்துகொள்ளவில்லை. எனினும், அவர் விரைவில் ரஷியா செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் (SCO) தலைமையை ஏற்க சீனாவுக்கு இந்தியா ஆதரவு தருவதாக அறிவித்துள்ளது.
இந்திய – சீன வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பின்போது இந்த தகவலை பரிமாறிக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.