காஷ்மீரில் தீவிரவாதிகள் உடனான துப்பாக்கி சண்டையில் இந்திய ராணுவ கேப்டன் தீபக் சிங் வீர மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் இருக்கும் எல்லைப்பகுதியில் ஒன்றான ஜம்மு காஷ்மீர் பகுதியில் கடந்த சில நாட்களாக தீவிரவாதிகளின் அதிகமாக இருப்பதால் அங்கு ஏராளமான ராணுவ வீரர்கள் குவிக்கபட்டு தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது .
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலையில் இருந்து தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் தொடர் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது .
Also Read : மருமகளை திருமணம் செய்து கொண்ட மாமியார் – பீகாரில் நடந்த வினோத சம்பவம்..!!
இந்நிலையில் வனப்பகுதி வழியாக தோடா மாவட்டத்துக்குள் தீவிரவாதிகள் ஊடுருவியதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தீவிரவாதிகளை சுற்றிவளைத்து பிடிக்க முயன்றபோது , ராணுவ கேப்டன் தீபக் சிங் தீவிரவாதிகளின் தாக்குதலில் சிக்கி வீரமரணம் அடைந்துள்ளார் .
இந்நிலையில் சுதந்திர தினத்துக்கு ஒருநாள் முன்னதாக தீவிரவாதிகள் தாக்குதல் நடந்திருப்பதை அடுத்து அனைத்து எல்லைப்பகுதிகளிலும் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது .