இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி காலமானார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிஷன் சிங் பேடி, தனது 77வது வயதில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு கிரிக்கெட் வீரர்களும், அரசியல் தலைவர்களும், இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1967 ஆம் ஆண்டு முதல் 1979 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய பிஷன் சிங் பேடி, 22 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார்.
சுமார் 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பிஷன் சிங், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் பயிற்சியாளராகவும், வர்ணனையாளராகவும் பணியாற்றியுள்ளார். இவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி மத்திய அரசு கெளரவித்தது குயப்பிடத் தக்கது.