2024 டி20 உலகக்கோப்பையை வென்று அசத்தியுள்ள இந்திய அணி தனி விமானம் மூலம் இன்று நாட்டின் தலைநகரான டெல்லிக்கு வந்திறங்கியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகளில் 1 மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற 2024 டி20 உலக கோப்பை தொடரில் 20 அணிகள் பங்கேற்று லீக் , சூப்பர் 8 மற்றும் அரையிறுதி என ஒவ்வரு அணியாக வெளியேறி கடந்த மாதம் 29 ஆம் தேதி நடைபெற்ற இறுதியில் போட்டியில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.
இதில் அபாரமாக ஆடிய இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது .
நாட்டையே பெருமையடைய வைத்த இந்திய அணியை கொண்டாட தடபுடலான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் பர்படாஸில் புயல், மழை காரணமாக இந்தியாவுக்கு திரும்ப முடியாமல் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தவித்து வந்தனர்.
Also Read : போதைப்பொருளால் மீண்டும் ஒரு படுகொலை – எடப்பாடி பழனிசாமி வேதனை
இந்நிலையில் நேற்று தனி விமானம் மூலம் தாய் நாட்டிற்கு புறப்பட்ட இந்திய அணி இன்று நாட்டின் தலைநகரான டெல்லிக்கு வந்திறங்கியுள்ள்ளது.
டெல்லி விமான நிலையம் வந்த இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் ஏராளமானோர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற பிறகு, மாலை மும்பை செல்லும் இந்திய அணி. அங்கு திறந்தவெளி பேருந்தில் உலக கோப்பையுடன் பேரணி செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.