இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழல்பந்துவீச்சாளரான அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டில் இருக்கும் பல நட்சத்திர வீரர்களுள் ஒருவராக வலம் வருபவர் ரவிச்சந்திரன் அஸ்வின் சுழற்பந்து வீச்சாளராக இந்திய கிரிக்கெட்டில் தனது பயணத்தை தொடங்கிய அஸ்வின் இன்று ஆல் ரவுண்டராக கலக்கி வருகிறார்.
அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வரும் நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிபயங்கரமாக விளையாடி பல சாதனைகளையும் படைத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ள அஸ்வின் அங்கேயும் தனது திறமையை திறம்பட காட்டி வந்த நிலையில் திடீரென சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்துள்ளார்.
Also Read : சென்னை துறைமுகத்தில் கடலில் பாய்ந்த கார் – ஓட்டுநரை தேடும் பணி தீவிரம்..!!
இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 537 விக்கெட்டுகளை வீழ்த்தி, சர்வதேச அளவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர்கள் பட்டியலில் 2வது இடத்தை அலங்கரித்து வருகிறார். சர்வதேச வீரர்கள் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளார்
எம்.எஸ்.தோனி பாணியில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடருக்கு நடுவே ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அஷ்வினுக்கு அடிலெய்டு டெஸ்ட் போட்டியே அவரது கடைசி சர்வதேச போட்டியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள அஷ்வினுக்கு முன்னாள் , இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் என பலரும் அவரின் அடுத்தகட்ட நகர்வுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.