இந்திய பொருளாதாரத்தின் கருப்பு தினம் – வைரலாகும் ஹேஷ்டேக்..!

Spread the love

கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு மக்கள் பட்ட துன்பங்களை நினைவுபடுத்தும் வகையில் #Black_Day_Indian_Economy என்ற ஹேஷ்டாக் டிரெண்டாகிவருகிறது.

பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு இன்றுடன் ஐந்து ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் #Black_Day_Indian_Economy என்ற ஹேஷ்டேகை நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் மோடியால் பணமதிப்பிழப்பு குறித்து அறிவித்தார். அதன்படி அன்று செயல்பாட்டிலிருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் பலர் தங்களிடம் இருந்த பணத்தை மாற்ற இயலாமல் பெரும் துன்பத்திற்கு உள்ளாகினர். ஒருசிலர் வங்கிகளின் வரிசையில் நின்று உயிரிழந்த சோக நிகழ்வும் அரங்கேறியது.

இந்நிலையில் இன்று பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட 5ம் ஆண்டில் நெட்டிசன்கள் பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட துன்பங்களை பதிவிட்டு இந்திய பொருளாதாரத்தின் கருப்பு நாள் என பொருள் கொள்ளும் #Black_Day_Indian_Economy என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


Spread the love
Related Posts