பாராலிம்பிக் போட்டியில், வில்வித்தை பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை ஷீத்தல் ஒரு புள்ளியில் உலக சாதனையை தவறவிட்டவிட்டுள்ளார்.
உலகளவில் பிரபலமான ஒலிம்பிக் தொடர் இம்முறை பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது .
உலக புகழ்பெற்ற இத்தொடரில் மொத்தம் 10500 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டள்ளனர் . இதில் இந்தியா சார்பில் 100க்கும் பெற்ற போட்டியாளர்கள் கலந்துகொண்டு பதக்கங்களை வென்று குவித்தனர்.
இந்நிலையில் தற்போது பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற நகரமான பாரிஸில் பாராலிம்பிக் போட்டிகள் கடந்த இரு நாட்களுக்கு முன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
Also Read : சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமான ஒளிரும் பொருள் கண்டுபிடிப்பு..!!
செப்.8 வரை நடைபெற இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான 17ஆவது பாராலிம்பிக் போட்டி தொடரில் 184 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க்க உள்ளனர் .
உலக புகழ் பெற்ற இந்த பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் 12 விளையாட்டுகளில் 32 பெண்கள் உட்பட 84 பேர் பங்கேற்கின்றனர் இதில் தமிழகத்தை சேர்ந்த வீரர் வீராங்கனைகளும் உள்ளனர்.
இந்நிலையில் இந்த மாபெரும் தொடரில் வில்வித்தை பிரிவில் இந்திய வீராங்கனை ஷீத்தல் தேவி, ஒரு புள்ளியில் உலக சாதனையை தவறவிட்டடுள்ளார்.
ஷீத்தல் தேதி, 703 புள்ளிகளை எடுத்து முந்தைய உலக சாதனையான 698 புள்ளிகளை முறியடித்த நிலையில், துருக்கி வீராங்கனை ஒஸ்னூர் க்யூர் 704 புள்ளிகளை எடுத்து ஷீத்தலை பின்னுக்குத் தள்ளினார்.
இருப்பினும், வில் வித்தையில் 700 புள்ளிகளை கடந்த முதல் இந்திய பாராலிம்பிக் வீராங்கனை என்ற பெருமையை ஷீத்தல் பெற்றுள்ளார்.