டி20 உலகக்கோப்பையை வென்ற சந்தோஷத்தில் உள்ள இந்திய அணி தற்போது தங்கள் நாட்டிற்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகளில் 1 மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற 2024 டி20 உலக கோப்பை தொடரில் 20 அணிகள் பங்கேற்று லீக் , சூப்பர் 8 மற்றும் அரையிறுதி என ஒவ்வரு அணியாக வெளியேறி கடந்த மாதம் 20 ஆம் தேதி நடைபெற்ற இறுதியில் போட்டியில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.
இதில் அபாரமாக ஆடிய இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது .
Also Read : உறவினர் வீட்டு திருமணத்தில் 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..!!
இந்நிலையில் டி-20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பர்படாஸில் இருந்து வெளியேற முடியாமல் தொடர்ந்து தவித்து வருகின்றனர்.
பர்படாஸில் புயல், மழை காரணமாக இந்தியாவுக்கு திரும்ப முடியாமல் கிரிக்கெட் வீரர்கள் தவித்து வருவதால் இந்தியாவில் இந்திய அணிக்காக தயாராகி வரும் பாராட்டு விழா தாமாதமாகி வருகிறது .
பார்படாஸில் பலத்த காற்று, மழையுடன் சூறாவளி தாக்கியதால் மின்சாரம், நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊரடங்கு உத்தரவால் அனைத்து விமானங்களும் ரத்து செய்தியப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளதால் நிலைமை சீரான பின்பு தான் இந்திய வீரர்கள் நாடு திரும்பும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.