முக கவசம் அணிய சொன்ன சிங்கப்பூரை இந்தியர் ஒருவர் தாக்கிய சம்பவம் சிங்கப்பூரில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததையடுத்து பல்வேறு நாடுகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.சிங்கப்பூரிலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அந்நாட்டு அரசு விதித்துள்ளது. ஓரிரு நாடுகளுக்கு மட்டும் சற்று விலக்களிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிங்கப்பூரில் உள்ள உணவகம் ஒன்றில், இந்தியர் ஒருவர் தாடைக்கு கீழ் முகக்கவசம் அணிந்திருந்தார். இதனையடுத்து, முக கவசம் சரியாக அணியாத சந்திரசேகரை சிங்கப்பூரை சேர்ந்த தன்னார்வலர் முக கவசம் அணியுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து தன்னை முக கவசம் அணிய சொன்ன தன்னார்வலரை இந்திய வம்சாவளியான சந்திரசேகர் என்பவர் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதனால் இந்திய வம்சாவளி சந்திரசேகர் மீது புகாரளிக்கப்பட்டது. இந்த புகாரையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட சந்திரசேகருக்கு ஏழு வாரங்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.