சாம்பியன்ஸ் ட்ராஃபி கிரிக்கெட் தொடரில் விளையாடப்போகும் இந்திய அணியை பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது.
கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் விரைவில் நடைபெற உள்ளது . இந்த தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, வங்கதேசமும் அணிகளும் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன.
இந்நிலையில் சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ரோஹித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தொடரில் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி:
ரோஹித் (C), கில் (VC), விராட் கோலி, ஷ்ரேயஸ், கே.எல்.ராகுல், ஹர்திக், அக்ஸர், வாஷிங்டன், குல்தீப், பும்ரா, ஷமி, அர்ஷ்தீப், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், ஜடேஜா ஆகியோர் ஸ்குவாடில் இடம்பெற்றுள்ளனர்.