டி20 உலக கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய ( ind vs pak ) இந்திய அணி புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
ரசிகர்கள் மத்தியில் ஏகபோக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் சுமார் 20 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன .
இதில் நியூயார்க் நகரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின .
இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடினமான இலக்கை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி பேட்டிங் செய்தது.
Also Read : நிறைவு பெற்ற கோடை விடுமுறை – 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறப்பு..!!
இந்திய வீரர்கள் சிறப்பான பேட்டிங்கை கொடுப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாகிஸ்தானின் அனல் பறக்கும் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து 19 ஓவர்களில் ஆல் அவுட்டான இந்திய 119 ரன்கள் மட்டுமே எடுத்து . இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 42 ரன்கள் எடுத்திருந்தார்.
இதையடுத்து 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. முதல் 6 ஓவர்களை சிறப்பாக கையாண்ட பாகிஸ்தான் அணி பவர் பிளே ஓவருக்கு பின் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது.
இறுதியில் கடைசி 5 பந்துகளில் பாகிஸ்தான் அணிக்கு 18 ரன்கள் தேவைபட்டது இருப்பினும் இந்திய அணியின் கிடுக்குபிடி பந்துவீச்சால் பாகிஸ்தான் அணி இலக்கை எட்டமுடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டது.
இந்த வெற்றியின் மூலம் டி20 உலக கோப்பை வரலாற்றில் குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை குவித்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது .
பாபர் அசாம், முகமது ரிஸ்வான், இஃப்திகார் அகமது என பாகிஸ்தான் அணியின் முக்கிய பேட்டர்களின் விக்கெட்டை வீழ்த்தி அசத்திய பும்ரா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.