இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடயிலான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று
வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், மூன்று ஒரு நாள் மற்றும் 5, 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்று விளையாட உள்ளது .
இதில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1க்கு0 என்ற கணக்கில் தொடரை அசால்டாக கைப்பற்றியது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடி வந்தது .
இதில் நேற்று நடைபெற்ற கடைசி மற்றும் மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது . இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி பேட்டிங் செய்தது .
அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷனும், சுப்மன் கில்லும் களம் களம் கண்டனர் . ஒரு நாள் தொடரில் சிறப்பாக விளையாடிய இஷான் தனது 6-வது அரைசதத்தை எட்டினார். அவரை தொடர்ந்து சிறிது நேரத்தில் சுப்மன் கில்லும் தனது 6-வது அரைசதத்தை கடந்தார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 77 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க . அடுத்து வந்த ருதுராஜ் கெய்க்வாட் 8 ரன்னில் வந்த வழி சென்றார் . 3-வது விக்கெட்டுக்கு களம் கண்ட சஞ்சு சாம்சன், அதிரடியில் எதிரணியை மிரளவைத்தார் .
அணியின் ஸ்கோர் 223-ஐ எட்டிய போது சஞ்சு சாம்சன் அரை சதம் கடந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார் . இந்த போட்டியில் நிச்சயம் சதம் அடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் 85 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார் .
இதையடுத்து கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும், சூர்யகுமார் யாதவும் கைகோர்த்து அதிரடி காட்டினர் . சூர்யகுமார் ஒருபக்கம் செம அடி அடிக்க கேப்டன் பாண்ட்யா கடைசி ஓவரில் இரு மெகா சிக்சர்களை பறக்க விட்டார் .
இந்திய அணியின் இந்த அபார பேட்டிங்கால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 351 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
முன்கள வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க அவர்கள் வரிசையில் வந்த மிடில் ஆர்டர் வீரர்கள் அணிக்கு தேவையான ரன்களை எடுக்க சிரமப்பட்டனர் .
இந்திய அணியின் பந்துவீச்சில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 35.3 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் 200 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் ஒருநாள் தொடரை 2-1 என கணக்கில் கெத்தாக கைப்பற்றியது.
வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை கைப்பற்றி அசத்தி இருக்கும் நிலையில் அடுத்ததாக நடைபெற இருக்கும் 20 ஓவர் தொடரிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது .