உலகில் உள்ள மொத்த தங்கத்தில் 11% தங்கத்தை இந்திய பெண்கள் வைத்துள்ளதாக உலக கோல்டு கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக கோல்டு கவுன்சில் கூறுகையில்
இந்திய பெண்கள் சுமார் 24,000 டன் தங்கம் வைத்துள்ளனர். மற்ற நாடுகள் வைத்திருக்கும் தங்கத்தை விட இது அதிகம்
உலகின் தங்கத்தில் 11% ( 24,000 டன்) இந்தியப் பெண்களிடம் உள்ளது. உலகின் முதல் 5 நாடுகளின் தங்கத்தை விட இது அதிகம்.
அமெரிக்கா 8,000 டன், ஜெர்மனி 3,300 டன், இத்தாலி 2,450 டன், பிரான்ஸ் 2,400 டன், ரஷ்யா 1,900 டன் தங்கம் வைத்துள்ளன.
Also Read : புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு – சென்னை காவல்துறை அதிரடி அறிவிப்பு..!!
இந்தியாவில் இருக்கும் தங்கத்தில் 40% தென்னிந்தியப் பெண்களிடம் உள்ளது. தமிழ்நாட்டு பெண்களிடம் மட்டும் 6,720 டன் தங்கம் உள்ளது.
இந்தியாவில் மணமான பெண்கள் 500 கிராம், மணமாகாத பெண்கள் 250 கிராம், ஆண்கள் 100 கிராம் வரையிலும் தங்கம் வைத்திருக்கலாம் என உலக கோல்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.