ஒலிம்பிக் விதிகளை மீறிய குற்றத்திற்காக இந்திய மல்யுத்த வீராங்கனை ஆண்டிம் பங்கல் தகுதிநீக்கம் செய்யப்பட்டு ஒலிம்பிக் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
உலகளவில் பிரபலமான ஒலிம்பிக் தொடர் இம்முறை பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
உலக புகழ்பெற்ற இத்தொடரில் மொத்தம் 10500 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டள்ளனர் . இதில் இந்தியா சார்பில் 100க்கும் பெற்ற போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில் ஒலிம்பிக் விதிகளை மீறிய குற்றத்திற்காக இந்திய மல்யுத்த வீராங்கனை ஆண்டிம் பங்கல் தகுதிநீக்கம் செய்யப்பட்டு ஒலிம்பிக் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
ஒலிம்பிக் விதிகளை மீறியதற்காக இந்திய மல்யுத்த வீராங்கனை ஆண்டிம் பங்கல் தகுதிநீக்கம்
செய்யப்பட்டு, அவருடனான பயிற்சியாளர் குழுவும் பாரிஸ் ஒலிம்பிக்கிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது .
தனக்கு மட்டுமே அனுமதி உள்ள அங்கீகார அட்டையை தன் சகோதரியிடம் கொடுத்து ஒலிம்பிக் கிராமத்துக்குள் அனுப்பியுள்ளார் ஆண்டிம் பங்கல். இதனை அடுத்து பங்கல் மற்றும் அவரது பயிற்சியாளர்கள் அடங்கிய குழுக்கான அங்கீகாரத்தை சர்வதேச ஒலிம்பிக் சங்கம் ரத்து செய்து அவர்களை உடனடியாக வெளியேறும்படி அறிவுறுத்தியது .
விதிகளை மீறியதற்காக, ஒலிம்பிக்ஸ் தொடரில் இருந்து வெளியேற்றப்ட்ட இந்திய மல்யுத்த வீராங்கனை ஆண்டிம் பங்கலுக்கு 3 ஆண்டுகள் தடை விதித்து இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே ஒலிம்பிக் தொடரில் இந்திய வீராங்கனைகள் பல இன்னல்களை சந்தித்து வரும் நிலையில் தற்போது ஒலிம்பிக் விதிகளை மீறி செயல்பட்டதாக மல்யுத்த வீராங்கனை ஆண்டிம் பங்கல் தகுதிநீக்கம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.