பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதிநீக்கம்
செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில் வினேஷ் போகட் மனுவை விளையாட்டுகளுக்கான நடுவர் மன்றம் தள்ளுபடி செய்துள்ளது .
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தத்தில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதி போட்டியில் கலந்துகொள்ள இருந்த நிலையில் எடை அதிகரிப்பு காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார் . இந்த செய்தி ஒட்டுமொத்த நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Also Read : தமிழக ரயில்வே திட்டங்களுக்கான நிதி குறைப்பை ஏற்க முடியாது – கொதிக்கும் ராமதாஸ்
இதையடுத்து பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, இந்திய வீராங்கனை வினேஷ் போகத் மேல் முறையீடு செய்தார்.
இந்த மனுவை ஏற்றும்கொண்டு விசாரித்த விளையாட்டுகளுக்கான நடுவர் மன்றம் இந்த வழக்கின் தீர்ப்பை இருமுறை ஒத்திவைத்தது . இந்நிலையில் எப்படியும் வெள்ளி பதக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த போது வினேஷ் போகத்தின் மனுவை விளையாட்டுகளுக்கான நடுவர் மன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக்கி அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது .