பிரபல ஹாலிவுட் படமான இண்டியானோ ஜோன்ஸ் படத்தில் பயன்படுத்தபட்ட தொப்பி 5 கோடிக்கு ஏலம் போயுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
பொதுவாக ஹாலிவுட் படங்கள் என்றாலே அன்று முதல் இன்று வரை உலகளவில் மிகவும் பேமஸ் ஆனது அதில் குறிப்பாக ஒரு சில படங்கள் காலம் கடந்து மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது .
அந்தவகையில் புதையல் சம்மந்தப்பட்ட படமான இண்டியானா திரைப்படங்கள் ரசிகர்களால் பெரிதளவில் வரவேற்கப்பட்டது இந்த படத்தின் அணைத்து பாகங்களும் ஸ்பேர் டூப்பர் ஹிட் அடித்து இன்று வரை பலரால் பார்க்கப்பட்டு வருகிறது .
Also Read : சென்னை விமான நிலையத்தில் நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற 3 பேர் கைது..!!
அந்தவகையில் கடந்த 1984ல் வெளியான ‘இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டெம்பிள் ஆஃப் டூம்’ திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட தொப்பி, சுமார் ₹5.28 கோடிக்கு ஏலம் போயுள்ளது.
பறக்கும் விமானத்தில் இருந்து இண்டியானா ஜோன்ஸ் கதாபாத்திரம் கீழே குதிக்கும்போது இந்த தொப்பி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜோன்ஸாக நடித்த ஹாரிசன் ஃபோர்டின் ஸ்டண்ட் டூப், டீன் ஃபெராதினி மறைந்ததைத் தொடர்ந்து அவரிடம் இருந்த இந்த தொப்பி ஏலத்தில் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.