Site icon ITamilTv

இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்த இந்தோனேசியப் பெண் – சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு..!!

Indonesian woman

Indonesian woman

Spread the love

மசாஜ் செண்டரில் இருந்து மீட்கப்பட்டு காப்பகத்தில் அடைக்கப்பட்ட இந்தோனேசியப் பெண்ணுக்கு, சோதனை நடத்திய காவல் ஆய்வாளர் நடராஜன் 2.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு சென்னை நீலாங்கரையில் உள்ள மசாஜ் செண்டரில் விபச்சாரம் நடப்பதாக, அங்கு வேலை செய்த இந்தோனேசிய பெண் காப்பகத்தில் அடைக்கப்பட்டார்

தனது அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டதாகக் கூறி, சோதனை நடத்திய காவல் ஆய்வாளர் நடராஜன் மீது ₹10 லட்சம் இழப்பீடு கோரி அப்பெண் வழக்கு தொடர்ந்தார்

Also Read : 3 ஆவதாக பிறந்த பெண் குழந்தை – சத்தமின்றி கதையை முடித்த தந்தை..!!

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அப்பெண்ணுக்கு ₹2.50 லட்சத்தை அரசு வழங்கி, அதனை நடராஜனின் ஊதியத்தில் பிடித்தம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்

இதையடுத்து தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து காவல் ஆய்வாளர் நடராஜன் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், ”உரிய முறையில் விசா பெற்று இந்தியா வந்த அப்பெண்ணை காப்பகத்தில் அடைக்கும் போது அந்நாட்டு தூதரகத்திற்கு தெரியப்படுத்தவில்லை. கவனக்குறைவாக செயல்பட்டதால் 26 நாட்கள் அப்பெண் காப்பகத்தில் இருந்துள்ளார்.

தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது. எனினும், இழப்பீட்டு தொகையை அரசு வழங்க வேண்டும் என்பது தவறான முன்னுதாரணம் ஆகி விடும் எனக் கூறி மேல்முறையீட்டு மனுவை நீதி தள்ளுபடி செய்தார்.


Spread the love
Exit mobile version