Indraja-Karthik marriage : காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா பிகில் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் ஆனவர்.
தற்போது இந்திரஜாவிற்கும் தொடர்வோம் அறக்கட்டளையின் நிறுவனரும் இயக்குனருமான கார்த்திக்குக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் முடிவடைந்த நிலையில், வருகிற 24ஆம் தேதி மதுரையில் திருமணம் நடைபெற உள்ளது.
இந்திரஜா மற்றும் கார்த்திக் இருவரின் சொந்த ஊரும் மதுரை என்பதால் அவர்களுடைய திருமணத்தை இரு வீட்டாரும் இணைந்து மதுரையில் நடத்த முடிவெடுத்து உள்ளார்கள்.
இதற்காக, பல திரைப்பிரபலங்களுக்கும், அரசியல் சார்ந்தவர்களுக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்திரஜா மற்றும் கார்த்திக் இருவருக்கும் “ஹல்தி பங்க்ஷன்” சென்னையில் நடைபெற்றது.
இதையும் படிங்க : 14 ஆண்டுகளுக்கு பின் கேரளாவில் நடிகர் விஜய் – உற்சாக வெள்ளத்தில் ரசிகர்கள்..!!
அதில், இந்திராஜாவின் குடும்ப நண்பர்களும் திரைத்துறை, சின்னத்திரை சார்ந்த பிரபலங்களும் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அதன்படி, இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருக்கிறார்கள் பிரபலங்கள். இதனால் ஆட்டம் பாட்டம் என்று வெகு விமர்சனமாக ஹல்தி பங்க்ஷன் நடைபெற்றது.
அப்போது அந்த ஹல்தி ஃபங்ஷனில் கலந்து கொண்ட பிரபலங்கள் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகவே, அதனைப் பார்த்த ரசிகர்கள் இவர்கள் தமிழகத்தை சார்ந்தவர்கள் தானே? பின் எதற்காக நம் பாரம்பரிய கலாச்சாரங்களை எல்லாம் மாற்றி வட மாநில பங்க்ஷன்களை எல்லாம் கொண்டாடுகிறார்கள்?
இப்படி நடிகர்கள் புதிது புதிதாக வேறு மாநில ஃபங்ஷன்களை கொண்டாடுவதால் தான் தமிழர்களின் மரபு அழிந்து வருகிறது.. என்று பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது தவறு.. தமிழர் முறைப்படி நலங்கு வைக்கும் பங்க்ஷனை நடத்துவது தான் நமக்கு பெருமை.
ஆனால், இப்படி பிரபலங்கள் (Indraja-Karthik marriage) வெளிமாநிலத்தவர்களைப் போல பங்க்ஷன்களை நடத்துவதால், இவர்களை பாலோ பண்ணும் தமிழர்களும் இதே போல செய்ய தொடங்கி விடுவார்கள்.
இதையும் படிங்க : ”ரம்பாவை ஓரங்கட்டும் VJ அர்ச்சனா..” – வைரலாகும் Glamour Photos!
அண்மையில், நடிகர் விஜயகுமார் வீட்டில் நடைபெற்ற திருமணத்திலும், கிட்டத்தட்ட ஒரு வாரமாக புதுப்புது பங்ஷன்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
அதை பாலோ செய்து இப்பொழுது ரோபோ சங்கரின் மகள் திருமணமும் நடைபெறுகிறது. இப்படியே போனால்.. இதுவே ட்ரெண்டாகிவிடும்.
இனி தமிழர்கள் எல்லோரும் வட மாநில பங்க்ஷன்களை கொண்டாட கூடிய நிலை வந்து விடும் என்று இணையத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.