இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடயிலான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், மூன்று ஒரு நாள் மற்றும் 5, 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்று விளையாட உள்ளது .
இதில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1க்கு0 என்ற கணக்கில் தொடரை அசால்டாக கைப்பற்றியது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது.
அதன்படி இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள உலக புகழ் பெற்ற கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் கடந்த ஜூலை மாதம் 27ம் தேதி நடைபெற்ற நிலையில், இதில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து இந்த இரு அணிகள் மோதும் கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று மாலை நடைபெறவுள்ளது. இந்த இரண்டு அணிகளும் தற்போது சம நிலையில் உள்ளதால் இன்றைய போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இரு அணி வீரர்களும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர் .
இந்நிலையில் இன்று நடைபெறும் கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்