கணவருக்கு தெரியாமல் Meeting -தாலிச் செயினை பறிகொடுத்த இளம்பெண்!

அடையாளம் தெரியாத நபரை வீட்டிற்கு இளம்பெண் ஒருவர் வரவழைத்து தாலியை பறிகொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இன்ஸ்ட்ராகிராம் மோகம் இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகரித்துள்ளது. குறிப்பாக லைக்குகளை அள்ள பல பாடல்களுக்கு நடனமாடி ரீல்ஸ் செய்து இன்ஸ்ட்ராகிராமில் பதிவிடுகிறனர்.

இவ்வாறு இன்ஸ்ட்ராகிராமில் பதிவிடும் வீடியோக்களால் ஆபத்தும் இருக்கும் என்பதை உணராத இளம் பெண் ஒருவர், தனது கணவனுக்கு தெரியாமல் பல பாடல்களுக்கு ரீல்ஸ் செய்து இன்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டு வந்துள்ளார்.
இதனை பார்த்த திண்டுக்கலை சேர்ந்த 20 வயதான பிரகதீஸ்வரன் என்ற இளைஞன் 33 வயதான அந்த பெண்ணின் ரீல்சுகளுக்கு பல ஹர்ட்டுகளை அள்ளி வீசி உள்ளார்.

இதனை அடுத்து இன்ஸ்ட்ரா மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், பிரகதீஸ்வரன் ஒரு வேலை விஷயமாக திருப்பத்தூர் வருவதாகவும், அப்படியே அந்த இளம் பெண்ணை நேரில் சந்திப்பதாகவும் கூறி உள்ளார்.

இளைஞனின் ஆசை வார்த்தையில் மயங்கிய பெண், கணவருக்கு தெரியாமல் மாமியார் வீட்டில் அந்த இளைஞனை தனியாக சந்தித்துள்ளார். அங்கு இருவரும் பேசிக்கொண்டு இருந்த போது கழுத்தில் அணிந்திருக்கும் நகைகள் அனைத்தும் தங்கம்மா என அந்த இளைஞன் கேட்க, தாலி மட்டும் தான் தங்கம் என்று அந்த பெண் கூறி உள்ளார்.

இதனைக் கேட்ட அந்த இளைஞன் தாலியை பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம் பெண் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த இளைஞனை கைது செய்த போலீசார், மூன்றரை பவுன் தாலிச் செயினை மீட்டு இளம் பெண்ணிடம் ஒப்படைத்தனர்.

அடையாளம் தெரியாத நபரை வீட்டிற்கு வரவழைத்து தாலியை பறிகொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Total
0
Shares
Related Posts