பொது நிகழ்ச்சியில் எம்.எஸ்.தோனி பகிர்ந்த சுவாரஸ்யமான ‘பெங்காலி’ சம்பவம்..!!

பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட எம்.எஸ்.தோனி தான் டிக்கெட் பரிசோதகராக இருந்த போது நடந்த சுவாரஸ்யமான ‘பெங்காலி’ சம்பவம் குறித்து கலகலப்பாக பேசியுள்ளார்.

அண்மைகாலக புதிய கெட்டப்பில் பல பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் எம்.எஸ்.தோனி தன் வாழ்வில் நடந்த பல சுவாரஸ்யமான சம்பவங்களை நினைவு கூர்ந்து பேசி வருகிறார்.அந்தவகையில் தற்போது தான் டிக்கெட் பரிசோதகராக இருந்த போது நடந்த ஒரு சுவாரஸ்யக சம்பவம் குறித்து பேசியுள்ளது இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.

கரக்பூரில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றியதால், சுற்றி இருப்பவர்கள் பெங்காலியில் பேசினால் என்னால் புரிந்துகொள்ள முடியும் ஆனால் தெளிவாக எனக்கு பெங்காலி பேச தெரியாது .

ஒருமுறை வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்துகொண்டிருந்தேன். எனக்கு பெங்காலி தெரியும் என அந்த அணி வீரர்களுக்கு தெரியவில்லை. எப்படி பந்துவீச வேண்டும் என கீப்பர் பெங்காலி மொழியில் பவுலருக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தார்.

பவுலர் எப்படி பந்துவீசப் போகிறார் என எனக்கு முன்கூட்டியே தெரிந்துவிட்டது. போட்டி முடிந்த பின் அவர்கள் பேசுவதை கேட்டு நான் ரியாக்ஷன் கொடுத்தேன். அப்போது . “ஹே இவருக்கு பெங்காலி புரிகிறது என ஷாக் ஆனார்கள் நான் எதையும் கண்டுகொள்ளாமல் வழக்கம் போல் அங்கிருந்து நகர்ந்தேன் என எம்.எஸ்.தோனி கூறியுள்ளார்.

Total
0
Shares
Related Posts