சென்னை அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் , மாணவகர்கள் , திரைபிரபலங்கள் என பலரும் கடும் கண்டன்ம தெரிவித்து வருகின்றனர்.
Also Read : உரிமையாளரின் உயிரை பறித்த செல்ல நாய்கள் – அமெரிக்காவில் நடந்த துயர சம்பவம்..!!
தமிழகத்தை உலுக்கிய இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் தற்போது அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மாணவியின் படிப்பு செலவை அரசே ஏற்கவேண்டும் என்றும் மாணவியின் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள்ளது.