ஈரானில் (Iran) ஹிஜாப் (Hijab )அணியாததால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான ஈரானிய பெண்கள் ஹிஜாபை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அமினியின்(annie )மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானிய பள்ளி மாணவிகள் மற்றும் பெண்கள் தங்களது ஹிஜாப்களை கழற்றி பேரணிகளை நடத்தி பெரும் எண்ணிக்கையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும் பல பெண்கள் தலைமுடியை வெட்டியுள்ளனர்.
இவர்களது போராட்டத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து ஆதரவு கிடைத்து வருகிறது. இந்நிலையில், ஈரான் (Iran)பெண்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது தலைமுடியை வெட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ட்ராஸ்பேர்க்கில் ஐரோப்பிய ஒன்றிய விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி, நாங்கள் மக்களும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களும் ஈரானில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் நிபந்தனையற்ற மற்றும் உடனடியாக நிறுத்த வேண்டும்.
” ஈரான் பெண்கள் விடுதலையாகும் வரை நாங்கள் உங்களுடன் நிற்போம்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி. தனது தலைமுடியை வெட்டினார்.இவரின் இந்த செயலை பார்த்து அனைத்து எம்பிக்களும் வாயடைத்து போனார்கள்.
இந்த சம்பவத்தின் வீடியோவை அல் சஹ்லானி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் இதுவரை 133 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஈரான் நாட்டில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக சுவீடன் எம்.பி. தனது தலைமுடியை வெட்டியுள்ளார்.
மேலும் காவல்துறையினரால் மஹ்சா அடித்துக் கொல்லப்பட்ட அந்த பெண்ணிற்கு ஆதரவாக நிலையில் இதன் காரணமாக ஈரான் முழுவதும் ஹிஜாப் எதிர்ப்பு வன்முறை வெடித்தது. பெண்களுக்கு ஆதரவாக ஏராளமான ஆண்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில், ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இருப்பதாக ஈரான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.