Site icon ITamilTv

போலி இணையதளம் மூலம் ஐபிஎல் டிக்கெட் மோசடி – சைபர் கிரைம் போலீசார் அதிர்ச்சி தகவல்..!!!

tata ipl

tata ipl

Spread the love

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் (tata ipl) போட்டிகளை நேரில் காண போலி இணையதளம் மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாக சைபர் கிரைம் போலீசார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

Also Read : https://itamiltv.com/rajnath-singh-is-coming-to-tamil-nadu-today-for-a-2-day-visit/

தற்போதைய நிலவரப்படி ராஜஸ்தான் அணி முதல் இடத்திலும் கொல்கத்தா அணி 2 ஆம் இடத்திலும் லக்னோ அணி 3 ஆம் இடத்திலும் சென்னை அணி 4 ஆம் இடத்திலும் ஹைதராபாத் 5 ஆம் இடத்திலும் பஞ்சாப் அணி 6 ஆம் இடத்திலும் குஜராத் அணி 7 ஆம் இடத்திலும் மும்பை அணி 8 ஆம் இடத்திலும் பெங்களூரு அணி 9 ஆம் இடத்திலும் டெல்லி அணி கடைசி இடத்திலும் உள்ளது.

இதில் இந்த வாரம் நடைபெறும் போட்டிகள் அனைத்தும் படு பயங்கரமான போட்டிகள் என்பதால் இந்த போட்டிகளை நேரில் காண ரசிகர்கள் செம ஆர்வமாக உள்ளனர். இதற்கான டிக்கெட்டுகளை வாங்கவும் ரசிகர்கள் முண்டி அடித்து வருகின்றனர்.

இந்த பயன்படுத்தி கொண்ட மோசடி கும்பல் ஒன்று பிரபல புக்கிங் இணையதளங்களின் பெயரில் போலியாக இணையதள பக்கம் தொடங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில், வீரர்களின் அருகேயே அமர்ந்து போட்டியை பார்க்கலாம் என கூறி பல லட்சம் மோசடி செய்துள்ளதாக சென்னை மற்றும் ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் சென்னை – பெங்களூரு போட்டியின் போது, அதிகளவு டிக்கெட்டுகளை (tata ipl) விற்பனை செய்து மோசடி செய்துள்ளதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. .


Spread the love
Exit mobile version