ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா கடந்த ஜூலை மாதம் 31 தேதி டெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டதற்கு இஸ்ரேல் தான் காரணம் எனக் கூறிய ஈரான் . இதற்காக இஸ்ரேலை நிச்சயம் பழிவாங்குவோம் என ஈரான் அரசு அறிவித்திருந்தது .
சொன்னது சொன்னது போல் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாஹ் உள்ளிட்டோரின் தியாகத்திற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறோம்.
Also Read : பள்ளி கட்டணம் செலுத்தாத மாணவர்களை மோசமாக தண்டித்த பள்ளி நிர்வாகம்..!!
இஸ்ரேல் எங்களின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தால், எங்களின் அடுத்த தாக்குதல்கள் இன்னும் அழிவுகரமானதாக இருக்கும் ஈரான் ராணுவம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து இரு நாட்டு எல்லைகளில் போர் பதற்றம் நிலவி வருவதால் இரு நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.