திடீரென மேடை ஏறி ஆளுநரை அறைந்த நபர்.. – அதிர்ந்து போன அரங்கம்..!

ஈரானில் ஆளுநர் பதவியேற்பு விழாவின்போது, திடீரென மேடையில் ஏறி ஒருவர் ஆளுநரை ஓங்கி அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் ஆளுநராக அபிதின் கோராம் நியமிக்கப்பட்டுள்ளளார். அவரது பதவியேற்பு விழாவின்போது திடீரென வேகமாக மேடை ஏறி வந்த ஒருவர், அபிதினின் முகத்தில் எதிர்பாராத விதமாக சட்டென்று அறைந்தார்.

உடனடியாக அருகில் நின்ற பாதுகாவலர்கள் அந்த நபரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.  அயுப் அலிஜாதே என்பவர், ஆளுநரை அறைந்ததற்கான காரணம் தெரியாத நிலையில், தனது மனைவிக்கு ஆண் மருத்துவர் ஒருவர் மருத்துவம் செய்ததால் கோபத்தில் இருந்த காரணத்தால் அறைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது ஆளுநரை அறைந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Total
0
Shares
Related Posts