நடிகர் விஜய் இலவச பள்ளிக்கூடம் கட்டுகிறாரா?

Spread the love

நடிகர் விஜய் மாணவர்களுக்கு இலவசமாக படிக்க சென்னை அருகே உள்ள திருப்போரூரில் பள்ளிக்கூடம் கட்டிவருவதாக ஒரு செய்தி பரவி வருகிறது.

இதுபற்றி விசாரித்தவகையில்;

பள்ளிக்கூடம் கட்டுவது விஜய் அல்ல… அவருடைய உறவினர் பிரிட்டோ என்பது தெரியவந்துள்ளது. இவர், விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ படத்தை தயாரித்தவர். அவருக்கு சொந்தமாக ஏற்கனவே ஒரு கல்லூரியும், பள்ளிக்கூடமும் இருக்கிறது. தற்போது திருப்போரூரில் கட்டுவது, இரண்டாவது பள்ளிக்கூடம்.

“இந்த பள்ளிக்கூட கட்டுமான பணிகளை சமீபத்தில் விஜய் சுற்றிப்பார்த்தார். உடனே விஜய் தான் பள்ளிக்கூடம் கட்டி வருகிறார் என்று வதந்தியை பரப்பி விட்டார்கள்” என்று பள்ளி நிர்வாகிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார்.


Spread the love
Related Posts