விஜய் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தி கோட் AI மூலம் கேமியோ ரோலில் விஜயகாந்த வரும் கதாபாத்திரம் குறித்த சிறப்பு போஸ்டர்கள் வெளியாகி உள்ளது.
விஜய்யின் 68 வது திரைப்படமாக உருவாகி உள்ள இப்படத்தை AGS நிறுவனம் மாபெரும் பொருட் செலவில் தயாரிக்க விஜய்யுடன் சேர்ந்து இப்படத்தில் பிரஷாந்த் , பிரபுதேவா , சினேகா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் நாளை உலகம் முழுவதும் , உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது கோட் படத்தில் கேமியோ ரோலில் வரும் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் கதாபாத்திரம் குறித்த சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
படக்குழு வெளியிட்ட போஸ்டரை வைத்து பார்க்கும்போது கேப்டன் விஜயகாந்த் இப்படத்தில் ஒரு போர் விமானியாக வருவது போல் தெரிகிறது. ஏரளமான ஆச்சிரியங்களை படத்தில் பதுக்கி வைத்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ள நிலையில் இன்னும் இப்படத்தில் என்னனென்ன ட்விஸ்டுகள் வரப்போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.