இந்தியாவில் டெஸ்லா முதலீடு செய்ய விருப்பம் காட்டாத நிலையில் டெஸ்லாவை இந்தியாவுக்குள் இழுக்க முயற்சி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய எலக்ட்ரிக் வாகனச் சந்தையில் மஹிந்திரா, டாடா போன்ற முன்னணி நிறுவனங்கள் கவனம் செலுத்தத் தொடங்கியதன் விளைவாக, இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி மற்றும் அதற்கான முதலீடுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன
இந்நிலையில், எலன் மஸ்கின் டெஸ்லா, இந்திய சந்தைக்குள் நுழையும் சூழலை புதிய EV கொள்கை மூலம் இந்திய அரசு ஏற்படுத்தி இருப்பது, உள்நாட்டு நிறுவனங்களை சற்று நெருக்கடிக்கு தள்ளியுள்ளது.
இந்தியாவில் டெஸ்லா முதலீடு செய்ய விருப்பம் காட்டாத நிலையில், எலன் மஸ்கை மீண்டும் தன் பக்கம் இழுக்க டோனல்ட் ட்ரம்ப் உடனான நல்லுறவை இந்தியா பயன்படுத்திக்கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒருவேளை இந்தியாவில் டெஸ்லா முதலீடு செய்தால் அது நிச்சயம் உள்நாட்டு நிறுவனங்களை கடுமையான நெருக்கடிக்கு தள்ளும் என்பதில் எந்த வித சந்தேகம் இல்லை .