மரணத்தை கணிக்கும் பூனை..! மனிதனுக்கு கொம்பா..!

இப்படியும் ஒரு சட்டமா (law)..?

உலகத்துல இருக்கக்கூடிய பல்வேறு நாடுகள்ல இருக்க பலவிதமான சட்டங்கள் (law) பற்றியும் நாம கேள்விப்பட்டிருப்போம்.. ஆனா, ஒரு நாட்டுல இறக்கக் கூடாது அப்டினு ஒரு சட்டம் போட்ருக்காங்க. அது எந்த நாடு? நார்வே.. ஆமாங்க.. நார்வேல Longyearbyen அப்படின்ற சிட்டில இறக்கக்கூடாதுதுனு சட்டம் போட்ருக்காங்க. அப்டினா அங்க யாருமே இறக்க மாட்டங்களானு நீங்க கேக்கலாம். ஆமாங்க.. அங்க யாருமே இறக்க மாட்டாங்க. ஏன்னா.. அங்க இறந்து போற நிலைல இருக்கக் கூடியவங்கள நார்வேல இருக்கக் கூடிய வேற ஒரு சிட்டிக்கு அனுப்பி வச்சுருவாங்க. அதுமட்டுமில்லாமல் அங்க இருக்கக்கூடிய soil எப்பவுமே பனி மூடியே தான் இருக்கும். அதுனால, அங்க இறப்பவர்களோட உடல் சீக்கிரமா decompose ஆகாது, so அந்த உடல் மூலமா மற்றவர்களுக்கும் நோய் பரவிட கூடாதுனு தான் இப்படி ஒரு சட்டம் போட்ருக்காங்க.

மரணத்தை கணிக்கும் பூனை..!

பொதுவா ஒருத்தர் இறக்கப் போறாரு அப்படினா அது ஐந்தறிவு ஜீவன்களான நாய், பூனை இது மாதிரியான பிராணிகளுக்கு தெரியும்னு சொல்லுவாங்க. அதே மாதிரி அமெரிக்கால இருக்கக்கூடிய ஒரு மருத்துவமனையில் ஆஸ்கர் அப்படி என்ற ஒரு பூனை மனிதர்கள் பாத்தாலே பயந்துகிட்டு பெட்டுக்கு கீழ போய் படுத்துருமாம். ஆனா, அந்த ஆஸ்கர்ன்ற பூனை அந்த மருத்துவமனையில் ஒருத்தர் உயிர் இழக்க போறாங்கன்னு தெரிஞ்சுச்சுன்னா பல மணி நேரத்துக்கு முன்னாடியே அந்த பேஷன்ட் பக்கத்துல போய் உட்கார்ந்துகிட்டு அவங்களுக்கு ஆறுதல் அளிக்கிற விதமா அவங்க பக்கத்துலயே படுத்துக்குமாம். இதே மாதிரி ஆஸ்கர் கிட்டத்தட்ட துல்லியமா 50 பேரோட இறப்புகளை முன்கூட்டியே கணிச்சிருக்காம். இதை பார்த்த அங்கிருந்த டாக்டர்ஸ் ஆஸ்கர் யார் கிட்டயாவது போய் படுத்ததுன்னா அந்த பேஷண்டு மேல அதிக கவனம் செலுத்தவும் ஆரம்பிச்சாங்களாம். இப்படி இருக்கையில எதிர்பாராத விதமா ஒரு நாள் ஆஸ்கர்க்கு 17 வயது இருக்கும் பொழுது அந்த பூனை உயிரிழந்திருக்கு.

மனிதனுக்கு கொம்பா..!

யாராவது உங்க கிட்ட வந்து கொம்பு உள்ள மிருகங்களோட பெயர்கள் பத்து சொல்லுங்கனா ஈஸியா சொல்லிடுவிங்க.. ஆனா, அந்த பட்டியல்ல மனிதனும் இணைய போறான்னு சொன்னா நம்ப முடியுதா? ஆமாங்க..
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மருத்துவர்கள் அங்க இருக்கக் கூடிய மக்கள் கிட்ட ரிசெர்ச் நடத்துனதுல சீக்கிரமாவே மனிதர்களுக்கும் கொம்பு முளைக்கும்ன்னு கண்டுபிடிச்சுருக்காங்க. ஆனா அந்த கொம்பு தலைக்கு மேல முளைக்காதாம்.பின் தலையில தான் முளைக்குமா. ஏன்னா.. நாம செல் போன் அதிகமா யூஸ் பண்றதுனால குனிஞ்ச தல நிமிராம நாம செல் போனயே பாத்துட்டு இருக்கோம். அதுனால, நம்மளோட கழுத்து பகுதில ஒரு சதை வளரும்னும், அந்த சதையை சப்போர்ட் பண்ண அது கூடவே ஒரு எலும்பும் வளரும்னு சொல்றாங்க. அந்த எலும்புதான் கொம்பு மாதிரி காட்சி அளிக்கும்னும் சொல்றாங்க. இதுனால தான் இந்த research முடிவில் மனிதன் அடுத்த பரிணாம வளர்ச்சிக்கு தயாராகிட்டதா சொல்லிருக்காங்க.

Total
0
Shares
Related Posts