அமெரிக்காவின் 47 ஆவது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் விரைவில் பொறுப்பேற்க்க உள்ள நிலையில் முதற்கட்டமாக சட்ட விரோதமாக குடியேறியுள்ள இந்தியர்களை வெளியேற்றப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட கமலா ஹாரிஸை வீழ்த்தி குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் அபார வெற்றி பெற்றார்.
Also Read : காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காலமானார்..!!
இதன்முலம் அமெரிக்காவின் 47 ஆவது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் விரைவில் பொறுப்பேற்க்க உள்ளார். இன்னலையில் அதிபராக பதிவு ஏற்கும் முன்பே பல முக்கிய துறைகளை பல அதிகாரிகளை நியமித்து பல முக்கிய முடிவுகளை திறம்பட எடுத்து வரும் டிரம்ப் தற்போது அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிலும் குறிப்பாக சட்ட விரோதமாக குடியேறியுள்ள சுமார் 18,000 இந்தியர்களை முதற்கட்டமாக வெளியேற்றவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . சட்டபூர்வ அனுமதி இல்லாதவர்கள் என அடையாளம் காணப்பட்ட சுமார் 15 லட்சம் பேரில் 18,000 பேர் இந்தியர்கள் என்று கூறப்படும் நிலையில் டிரம்ப்பின் இந்த நடவடிக்கை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.