அகதிகள் முகாமில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் ..! பொதுமக்கள் பலர் உயிரிழப்பு…

காஸாவில் உள்ள அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலர் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பாலஸ்தீனர்களின் ஹமாஸ் அமைப்பிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக இருந்து வரும் தீரா பகையின் காரணமாக கடுமையான மோதல்கள் தொடர்ந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இஸ்ரேல் மீது ஹமாஸ் ஜிஹாதிகள் மிகப் பெரிய ஏவுகணை தாக்குதலை நடத்தினர்.

இந்த ஈவிரக்கமற்ற தாக்குதலில் இஸ்ரேலில் 1,500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அது மட்டும் இன்றி 100க்கும் மேற்பட்டோரையும் ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

ஹமாஸ் ஜிஹாதிகளின் கொலைவெறி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல், தனது முழு பலத்தையும் பயன்படுத்தி இடைவிடாமல் தாக்குதல் நடத்தி வருகிறது .

இந்நிலையில் காசாவின் ஜபாலியா பகுதியில், பாலஸ்தீனியர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த அகதிகள் முகாமில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது . இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும் , 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது .

இந்தப்பக்கம் ஹமாஸ் படைத்தளபதியை கொல்வதற்காக பொதுமக்கள் தங்கியுள்ள முகாம் என தெரிந்தே குண்டு போட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

Total
0
Shares
Related Posts